தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தமிழக மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து நேற்று மாலை 10 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று அக்டோபர் 06 காலை நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து 17, 000 ஆயிரம் கனஅடியாக உள்ளது இதனை அடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்