தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நல்லம்பள்ளி பண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நேற்று (18. 09. 2024) ஆய்வு செய்தார்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு பராமரிக்கப்படும் உள்நோயாளி, வெளிநோயாளி பதிவேடுகளை நேரடியாக ஆய்வு செய்தும், கர்ப்பிணி தாய்மார்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பண்டஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், கற்றல் திறன் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். உடன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், சர்வோத்தமன் உடனிருந்தனர்.