தர்மபுரி: திமுக அரசை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம்

72பார்த்தது
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் தருமபுரி நகராட்சியில் இருந்து பேருந்து நிலையம் வரை முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மூன்று முறை, சொத்துவரி, மின்கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்து கட்டணங்களும் உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வுடன், ஆண்டு தோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை உள்ளதால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவ தாகவும், இதற்கு காரணமான தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ் ஆர் வெற்றிவேல், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் என் ஜி எஸ் சிவப்பிரகாசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி