டிடி தமிழ் தொலைக்காட்சியின் இந்தி மாத நிறைவு நாள் விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை குளறுபடியுடன் பாடிய நிலையில் சர்ச்சையானது. மேலும், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரிகள் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் ரவி பங்கேற்ற தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரிகளுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக பாடப்பட்டது.