ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் உபயோக சாதனங்களிலும், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது. தனிநபர் தகவல்களைத் திருடி தன்னிச்சையாக arbitrary code குறியீடுகளைச் செயல்படுத்தி denial of service (DoS) கட்டமைப்பு மூலம் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. பயனர்கள், தங்கள் சாதனங்களில் பொருத்தமான அப்டேட்களை மேற்கொள்ள CERT-In அறிவுறுத்தியுள்ளது.