சத்தீஸ்கர்: ராய்ப்பூரில் ரஷ்ய பெண் ஒருவர் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் ஸ்கூட்டரில் சென்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அங்கு சென்ற போலீசாரிடம், விபத்து ஏற்படுத்திய பெண், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், காரில் 'இந்திய அரசு' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்தியவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.