தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது. நேற்று செப்டம்பர் 29 நடைபெற்ற வார சந்தையில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஒரு மூட்டை வெற்றிலை 8000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 16000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் நேற்று (செப்.,29) ஒரே நாளில் ரூ. 4 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையாக வியாபாரிகள் தெரிவித்தனர்.