கடத்தூர் பகுதியில் இருந்து தர்மபுரி, சேலம், திரு வண்ணாமலை, அரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு, கடத்தூர் பகுதி மையப்பகுதி ஆகும்.
நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பஸ்கள், கார்கள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், சாலை போக்குவரத்து, விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் கடத்தூர் பகுதியில் அழைக்கப்பட்டுள்ளது. இதில் கடத்தூ காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள், பழுத டைந்து காணப்படுகிறது மேலும் பராமரிப்பு இன்றி மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது. இதை சரி செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.