தர்மபுரியில் DNC GROUPS வழங்கும் தருமபுரியின் ஆன்மீகத்தில் ஆனந்தம் அமைப்பின் சார்பில் வன்னியர் மண்டபம் கலையரங்கில் நேற்று இரவு நடைபெற்றது இதில் ஆன்மீகத்தில் ஆனந்தம் ஆன்மீக சொற்பொழிவு பல்வேறு பகுதியில் இருந்து ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் தர்மபுரி காந்திநகர், அப்பா நகர், எம்ஜிஆர் நகர், கடைவீதி, குமாரசாமிபேட்டை, செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆன்மீகத்தில் ஆனந்தம் சொற்பொழிவு கண்டு களிக்க வந்திருந்தனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், நற்றமிழ் நாவலர் ஐயாமருத்துவர். ஜெ. இராஜமூர்த்தி கலந்துக்கொண்டு 'இறைமையின் இருப்பிடம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற்றினார்.
ஆன்மீகத்தில் ஆனந்தம் தலைவர் டி என் சி மணிவண்ணன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் சஞ்சீவராயன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெகன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சௌந்தர பாண்டியன், மற்றும் ஆன்மீகத்தில் ஆனந்தம் உறுப்பினர்கள்உட்பட ஆன்மீக பக்தர்கள் சொற்பொழிவுகளை கண்டு களித்தினர் இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீகத்தில் ஆனந்தம் தலைவர் டி என் சி மணிவண்ணன் செய்திருந்தனர்.