வழிமறிக்கும் தடையை தகர்த்து வளமான தமிழ்நாட்டை படைக்க உறுதியேற்போம் என உலகத்தமிழர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்ப்பெருமக்களுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். சித்திரை மாதத்தின் முதல் நாளையே தமிழ் மக்கள் பன்நெடுங்காலமாக தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் உள்ளத்தில் புதிய சிந்தனை, முயற்சி, உத்வேகம் பிறக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.