திருவாரூர் அருகே பின்னவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அழகு திருநாவுக்கரசு - சிந்து பைரவி தம்பதி. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தனது 8 மாத குழந்தைக்கு இன்று (ஏப்ரல் 13) காலை உணவு அரைத்து கொடுக்க முற்பட்டபோது, மிக்ஸியில் இருந்து மின்சாரம் தாக்கி சிந்து பைரவி தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.