மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர் அந்த கேள்வியை முழுவதுமாக கேட்பதற்குள்ளேயே செல்லூர் ராஜு பதிலளிக்க தொடங்கிவிட்டார். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எது செய்தாலும் வெற்றி.. வெற்றி.. வெற்றி” என சொன்னவுடன் அங்கிருந்து கிளம்பினார்.