தமிழகம் முழுவதும் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நேற்று அக்டோபர் 4 பிற்பகல் 2 மணி முதல் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிய துவங்கியது இந்த நிலையில் நேற்று இரவு தர்மபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், மெனசி வத்தல்மலை, அரூர், தொப்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது இதனால் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது மழை நின்ற பிறகும் பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.