தர்மபுரி: ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

71பார்த்தது
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே. ஆர். பி அணையில் கட்டப்பட்டுள்ளது தற்போது அணையில் நீர்மட்டம் அதிகரித்து அணையிலிருந்து தென்பெண்னை ஆற்றில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4290 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்க கூடிய தருமபுரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வருவாய்த் துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தென்பெண்ணை ஆற்றின் இரண்டு கரையோரங்களிலும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி