தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மற்றும் தர்மபுரி எம்.பி. ஆகமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய, பேரூராட்சி மற்றும் நகர பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கூட்டம் தேவரசம்பட்டியிலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய கூட்டம் ஜருகுவிலும், வருகிற 8-ஆம் தேதி நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கூட்டம் இண்டூரிலும் நடக்கிறது.
வருகிற 9-ஆம் தேதி தர்மபுரி மேற்கு ஒன்றிய கூட்டம் தர்மபுரி செந்தில் நகரிலும், 13-ஆம் தேதி பாலக்கோடு கிழக்கு ஒன்றிய கூட்டம் கடகத்தூரிலும், வருகிற 15-ஆம் தேதி ஏரியூர் ஒன்றிய கூட்டம் ஏரியூரிலும், 16-ஆம் தேதி பென்னாகரத்திலும், 17-ஆம் தேதி பாப்பாரப்பட்டியிலும் நடக்கிறது.
இதேபோன்று வருகிற 18-ஆம் தேதி பென்னாகரம் பேரூர் கழக கூட்டம் பென்னாகரம் சமுதாய கூடத்திலும், பாப்பாரப்பட்டி பேரூர் கழக கூட்டம் பாப்பாரப்பட்டியிலும் நடக்கிறது. வருகிற 19-ஆம் தேதி தர்மபுரி நகர பொது உறுப்பினர்கள் கூட்டம் தர்மபுரியில் நடக்கிறது. இந்த கூட்டங்களில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.