குட்கா விற்பனை கடைகளுக்கு சீல், 50 ஆயிரம் அபராதம்

64பார்த்தது
குட்கா விற்பனை கடைகளுக்கு சீல், 50 ஆயிரம் அபராதம்
இன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம், பொம்மஹள்ளி, கள்ளுக்கடை பகுதிகளில் இயங்கி வரும் மளிகை கடைகள் பேன்சி கடைகளில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதாவின் மேற்பார்வையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் குழுவினர் ஆய்வு செய்தபோது இரு கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. தலா 25 ஆயிரம் வீதம் 2 கடைகளுக்கும் அபராதம் விதித்து காரிமங்கலம் காவல்துறையினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மற்றும் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் உணவு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விழிப்புணர்வு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி