மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகத்தை, வக்பு வாரியம் நேரடி நிர்வாகத்திற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சமீபத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து வக்பு வாரியத்துக்கு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், யாரேனும் தேவையற்ற பிரச்சினைகள் ஈடுபட்டால் அவர்கள் மீது தெற்கு வாசல் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.