ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25 கிறிஸ்துமஸாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் குடில் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலப்பள்ளம் பகுதியில் அமைக்கப்படும் குடில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த குடிலைக் காண குமரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, கேரளாவில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். கிறிஸ்து பிறந்த காட்சிகள் இந்த குடிலில் மிகத் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கிறது.