தர்மபுரி: தனியார் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

81பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோமனஅள்ளி பகுதியில் இன்று காலை 11: 30 மணியளவில் தர்மபுரியில் இருந்து ஓசூர் நோக்கி செல்லும் எஸ்விஏ என்று தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் தினசரி தர்மபுரியில் இருந்து ஒசூர் மற்றும் ஓசூரில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பேருந்துகள் இந்த பேருந்து வழித்தடத்திற்கு தான் அதாவது, தருமபுரியில் இருந்து புலிக்கரை சோமனஅள்ளி வழியாக பாலக்கோடு வழியாக ஓசூர் செல்வதற்கு அனுமதி பெற்ற நிலையில் தற்போது தர்மபுரி ஓசூர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டதிலிருந்து புலிக்கரை, சோமனஅள்ளி உள்ளிட்ட ஊர்களுக்குள் செல்லாமல் நேரடியாக நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்வதால் சுற்று வட்டாரத்தில் உள்ள 22 கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக பலமுறை மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தர்மபுரி போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான பலனும் அளிக்காத நிலையில் இன்று பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்து காரிமங்கலம் காவலர்கள் போக்குவரத்து சீர்படுத்தும் முயற்சி ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி