கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாம்பியன் டிராபி தொடர் பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை பிப்.20ஆம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. பும்ரா காயம் காரணமாக இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார். இது இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றி என்பது முகமது ஷமியின் கையில் தான் உள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.