வாலிபரை சுட்டவர் கைது

562பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே குண்டல்மடுவை சேர்ந்தவர் ரவி, வயது 25; கோரையாறிலுள்ள தன் தாத்தா குப்புசாமியுடன் வசிக்கிறார். தாத்தா குப்புசாமி நிலத்தில் அறுவடை செய்த மஞ்சள் பாதுகாப்பிற்காக, நேற்று சென்ற ரவி அங்கு துாங்கியுள்ளார். அப் போது, நாட்டுத்துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தவர், வனவிலங்குகளை யாராவது வேட்டையாடுகிறார்களா என பார்த்தபோது, அவரது வலதுகை தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த அவரை உறவி னர்கள் மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்சில் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், மேல்சி கிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். ரவி புகார்படி, கோட் டப்பட்டி போலீசார், கோரையாரை சேர்ந்த ராஜமாணிக்கம், 39, என் பவரை கைது செய்து, அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து, எதற்காக ரவியை சுட்டார் என விசாரித்த வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி