அரூர் பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்க கோரிக்கை

52பார்த்தது
அரூர் பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்க கோரிக்கை
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் கடைகள் கட்டுமானப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. தரைத்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
விரைவில் பேருந்து நிலையப் பணிகள் அனைத்தும் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் அரூர் பேருந்து நிலையத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். நேற்று இக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமையில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான கோரிக்கை மனுவை வழங்கினர். அப்போது பேருந்து நிலையப் பகுதியில் அம்பேத்கரின் சிலையையும் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி