தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வலகத்தில் பொதுமக்கள் குறித்திருக்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியின் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் உள்ள 33 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது நேற்று 67 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் உடனடியாக 67 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இந்த மனுக்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சிவராமன் தேவராஜ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அன்பழகன், பார்த்திபன், புஷ்பராணி, உதவி காவல் ஆய்வாளர்கள் பரூக், குப்புசாமி, செல்வராஜ், உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.