தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (செப்.9) நடந்தது. ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உப கரணங்கள் வேண்டியும் மொத்தம் 398 மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.