கம்பைநல்லூரில் 20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

53பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூரில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெள்ளி வார சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று செப்டம்பர் 06 நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சிறிய அளவிலான ஆடுகள் 5, 000 ரூபாய் முதல் பெரிய அளவிலான ஆடுகள் 9, 700 ரூபாய் வரையிலும் மொத்தம் நேற்று ஒரே நாளில் 20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி