தர்மபுரி: தனியார் விடுதியில் விபச்சாரம் செய்த இருவர் கைது

52பார்த்தது
தர்மபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் காவல் ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் காவலர்கள் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது, குண்டல்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விடுதியில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவது தெரிந்தது. இதையடுத்து, அந்த விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் சோலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் , மேலாளர் மணிகண்டன் ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வரும் குமார் என்பவரை காவலர்கள் தேடி வருகின்றனர். இதணை தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி