அப்பாவிகளை ஆபத்து குழியில் தள்ளும் டீப்-பேக்.!

79பார்த்தது
அப்பாவிகளை ஆபத்து குழியில் தள்ளும் டீப்-பேக்.!
உலகமே உள்ளங்கையில் கிடைத்ததும், ஒவ்வொருவரும் அதன் நன்மை, தீமையை நேரடியாக எதிர்கொள்ள தொடங்கிவிட்டோம். ஒருவரை அவதூறாக சித்தரிக்க அன்று ஓவியங்கள், இன்று டீப்-பேக் தொழில்நுட்பம் என நிலைமை மாறிவிட்டது. ஏஐ டெக்னாலஜி மனிதர்களின் எதிர்கால தேவைக்கான தூணாக இருந்தாலும், அதனை தவறாக பயன்படுத்தும் நபர்களால் ஏராளமான குற்றங்கள் அரங்கேறுகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அசல் உருவ ஒற்றுமை கொண்ட தோற்றத்தை உருவாக்கும் டீப்-பேக், பல அப்பாவிகளின் எதிர்காலத்தை சீரழிக்கிறது. இந்த விஷயத்திற்கு தீர்வுகாண தொழில்நுட்ப நிறுவனங்களும் செயலாற்றுகின்றன.

தொடர்புடைய செய்தி