கோவையில் 17 வயது சிறுமி 7 கல்லூரி இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கஞ்சா பழக்கமே காரணமாக பார்க்கப்படுகிறது. மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்களே இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.