உ.பி.: விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரா- சட்டிகாரா விரிந்தாவன் சாலையில் பயணித்த ஹர்திக் ரத்தோர் 22 என்ற இளைஞரின் பைக் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. தூக்கி வீசப்பட்டு ஹர்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வண்டியை ஓட்டி வந்த நபர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.