பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளுக்கு காரணமாக ஆண்கள் மட்டுமே உள்ளனர். கணவன், மகன், தந்தை, அண்ணன், தம்பி என நெருங்கிய உறவினர்களாலேயே பெண்கள் பாலியல் ரீதியாக துன்பங்களை அனுபவிக்கும் கொடுமைகள் அரங்கேறிவருகிறது. பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் என இடம் என பல இடங்களில் காதல் என்ற பெயரில் அத்துமீறல்களும் நடைபெறுகிறது. காதலை ஏற்க மறுத்தாலோ அல்லது கைவிட நினைத்தாலோ ஆசிட் வீசுவது, ரயிலில் தள்ளி கொலை செய்வது என பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கதையாகிவருகிறது.