தவெக முதல் பொதுக்குழு கூட்டம் மகாபலிபுரம் அருகே பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதில் 3000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. அவர்களுக்காக பாண்டிச்சேரியில் இருந்து சமையல் கலைஞர்களை வரவழைத்து சுவையான விருந்தை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். வழக்கம் போல் சைவம் தான் என்றாலும் பல வெரைட்டியான உணவுகள் தயார் செய்து நிர்வாகிகளுக்கு வழங்க விஜய் கூறியுள்ளாராம்.