தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் மற்றும் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங் களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 334 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் விதிமுறை களை மீறிய 131 வாகன ஓட்டிகளுக்கு ரூ. 7 லட்சம் அபராதம் விதித்தனர். முறையான ஆவணம் இல்லாத 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோட்டார் வாகன ஆய்வாளர் இன்று கூறுகையில், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த கூடாது. கட்டாயம் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என தெரிவித்தார்