இயக்குநர் மாரிசெல்வராஜை பாராட்டிய தனுஷ்

3073பார்த்தது
இயக்குநர் மாரிசெல்வராஜை பாராட்டிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். ஜூன் 29 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் “மாமன்னன் திரைப்படம் ஒரு எமோஷன்” எனக் கூறி படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். "வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஃபஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான பங்களிப்பை செலுத்தியுள்ளனர். இடைவேளைக்காட்சியின்போது திரையரங்குகள் அதிரப்போகின்றன" என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி