தனுஷ், ஐஸ்வர்யா பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நவம்பர் 2ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் தனுஷுக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யாவுக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே 2022ஆம் ஆண்டு இருவரும் பிரிந்ததோடு, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை.