2021-ல் MLA-வான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் 2022-ம் ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது தனது 47 வது வயதில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.