டி20 உலகக்கோப்பை நடந்த நியூயார்க் ஸ்டேடியம் இடிப்பு.!

69பார்த்தது
டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்திய நியூயார்க்கில் உள்ள நாசாவ் ஸ்டேடியம் இடிக்கப்படுகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா போட்டிக்குப் பிறகு இடிக்கும் பணி தொடங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரூ.250 கோடி செலவில் மூன்றே மாதங்களில் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் டிராப்-இன் பிட்ச்கள் பயன்படுத்தப்பட்டன. இங்கு விளையாடிய அனைத்து போட்டிகளும் குறைந்த ஸ்கோருடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி