தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் மரணம்

12332பார்த்தது
தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் மரணம்
தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் கே. விஜயன் மரணமடைந்தார். இரண்டு நாட்களாக வீடு திறக்காத நிலையில், நண்பர்கள் காவல் துறையை அனுகி பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மரணமடைந்த நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் பிரதீப், திருட்டுப் பயலே 2, லிப்ட், ஹெய் சினாமிகா, இரும்புத்திரை, டெடி, ஹீரோ, ஆடை, மேயாத மான், மீசைய முறுக்கு உள்ளிட்ட பல படங்களில் வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி