ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் அரைத்த வாழைப்பழ பேஸ்ட்டை கொட்டி நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் பால் ஊற்றி, பாலில் வாழைப்பழத்தை நன்றாக வேக வைக்க வேண்டும். அதன் பிறகு வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறினால் சுவையான வாழைப்பழ பாயாசம் ரெடி. வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் இது போல் செய்து சாப்பிடலாம்.