சட்டமன்ற தேர்தலில் கடைசி 2 நாளில் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தேர்தலில் தொய்வான முடிவு கிடைத்தது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.