நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீலகிரியில் நடந்த கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே.கே. ராஜு, உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கால்பந்து மைதான அளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்காக 95,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.