வயநாடு நிலச்சரிவு பேரழிவின் பத்தாவது நாளான இன்று (ஆக., 08), தேடுதல் பணி முழுவீச்சில் தொடர்கிறது. முண்டகை, சூரல்மலை, சாலியாறு பகுதிகளில் மண் அள்ள
ும் இயந்திரங்கள் மூலம் சோதனை நடத்தப்படும். தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்ப்படையினரின் ஆய்வும் இன்று நடைபெறவுள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் சேத மதிப்பீடு பணிகளும் நடந்து வருகிறது.