நீதித்துறைக்கு அரும்பணி ஆற்றிய மூத்த வழக்கறிஞரான சட்ட நிபுணரும் இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஃபாலி நாரிமனின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரத்து இரங்கல் குறிப்பில்,'70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய ஃபாலி நாரிமனின் அனுபவம் வரலாற்று சிறப்புமிக்கது. நீதித்துறையில் அவரது பங்களிப்புகள் காலத்தால் அழியாது என்றும் நினைவுக்கூறப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.