துணை முதலமைச்சராக பதவிபேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளமைக்கு பாராட்டுகள். இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும், தமிழ்நாட்டை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.