கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்த நல்லூர் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் பாபு. இவர் வேப்பூரில் கார் மெக்கானிக் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக பட்டறையை திறக்காமல் பூட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(அக்.11) ஆயுத பூஜையொட்டி ஒர்க் ஷாப்பை சுத்தம் செய்ய திறந்தார். அப்போது அங்கு வைத்திருந்த ரூபாய் 2. 50 லட்சம் மதிப்பிலான கார் உதிரிபாகங்கள் திருடி போனது. இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.