வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கலைஞர் ரூபாய் 1. 12 கோடி மதிப்பீட்டில் குளம் தூர்வாரி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று அக்.16 பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.