கடலூர்: கேக் வாங்க குவியும் கூட்டம்

50பார்த்தது
2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறக்க உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இன்று மாலை முதலே புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் பெரும்பாலான இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடுவர். இதற்காக இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் 'கேக்' வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி