பெண்ணாடம்: சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

3279பார்த்தது
பெண்ணாடம்: சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அடுத்த மாளிகைகோட்டம் மெயின் ரோட்டை சேர்ந்த ரமேஷ் மகன் அஜித்குமார், தொழிலாளி. இவர் அங்குள்ள விருத்தாசலம் - திட்டக்குடி மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி