கேரளாவின் மலப்புரம் தலப்பாரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பயணிகள் காயம் அடைந்தனர். தொட்டில்பாலத்தில் இருந்து கொச்சி நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய நிலையில், 3 பேர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தலைகுப்புற கிடந்த பேருந்தில் இருந்து பயணிகளை மிகுந்த சிரமத்துடன் போராடி மீட்டனர். அப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.