வான்பாக்கம்: 105 வயது மூதாட்டி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தை சார்ந்தவர் கற்பகம், அவருக்கு 105 வயது. கற்பகம் தன் வேலைகளை தானே செய்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வயது மூப்பினால் உயிரிழந்தார். அவருக்கு 5 பேரன் பேத்திகளும், 11 கொள்ளு பேரன் பேத்திகளும் உள்ளனர். இறந்த மூதாட்டியின் உடலுக்கு அய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.