மேற்குவங்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் மூலம் உணவு தானியங்கள் மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் மதிய உணவு திட்டம் மற்றும் PDS ஆகியவற்றில் சமூக தணிக்கையை நடத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக தணிக்கை டிசம்பர் மத்தியில் இருந்து தொடங்கும். இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்துவதில் உள்ள முரண்பாடுகள் களையப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.